Loading...
மின்னஞ்சல்
magaliammanthirukkoil@gmail.com
ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
+91 94883 48515
08-08-2025 ஆடி 23 வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி பூஜை இரவு 08:00 மணி அளவில் நடைபெறும்.
08-08-2025 ஆடி 23 வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி பூஜை இரவு 08:00 மணி அளவில் நடைபெறும்.

கோவில் வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் காவுத்தம்பாளையம் கிராமம் வாமலைக்கவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு விஜயபுரியம்மன் எ மாகாளியம்மன் திருக்கோயில் இக் கோயில்லானது கடந்த 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும் இக்கோயில் வாமலைக்கவுண்டன்பாளையம் சுக்காகவுண்டன்புதூர் கந்தப்பகவுண்டன்புதூர் ஆகிய மூன்று ஊர் மக்களுக்கு சொந்தமான கோயில் ஆகும் இக்கோயில் ஆதி காலத்தில் கையோடு அமைத்து பெரியோர்களும் சான்றோர்களும் வழிபட்டு வந்தனர் பின்னர் சமீப காலத்தில் அம்மனுக்கு புதியதாக ஒரு கோயில் கட்டி தனி விமானம் அமைத்து மற்ற பரிவார தெய்வங்கள் எல்லாம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று மூன்று ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

அது சமயம் அனைத்து பெரியோர்கள் ஊர் மக்கள் முன்னிலையில் புதிய கோயில் அமைக்க பழைய கோயிலை அகற்றிவிட்டு புதிய கோயில் அமைக்கும் பணியை தொடங்கினார்கள் 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்து 04.06.2012 திங்கட்கிழமை அன்று மாகாளியம்மனுக்கு நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது .அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று மூன்று ஊர் மக்கள் முடிவு செய்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி கோயிலை புராணம் அமைத்து மராமத்து பணிகள் செய்து முனியப்ப சுவாமிக்கு தனி தனி நுழைவாயில் வைத்து திருக்கோயிலில் திருப்பணி நிறைவு செய்து திருக்குடமுழுக்கு எனும் மகா கும்பாபிஷேகம் 10.02.2025 திங்கட்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இக்கோயிலில் சிறப்பு அம்மனின் வாகனம் யாழி வாகனமாக உள்ளது இது நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்கும்.

நிர்வாகம்

கோ. தினேஷ்குமார்
தக்கார்/ ஆய்வாளர்
மேற்படி திருக்கோயில்
இந்து சமய அறநிலையத்துறை

கி. கோபால்
நடைமுறை நிர்வாகி
வாமலைக்கவுண்டன்பாளையம்

சமீபத்திய நிகழ்வுகள்

திருக்குடமுழுக்கு எனும் மகா கும்பாபிஷேகம் 10-02-2025 திங்கட்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பார்க்க
புகைப்படங்கள்

சமீபத்திய புகைப்பட தொகுப்பு

அருள்மிகு விஜயபுரி அம்மன் (எ) மாகாளியம்மன் திருக்கோயில்